மக்கள் மரணப் பொறியில் எனும் வாசகம் அடங்கிய துண்டுபிரசுரங்கள் திருகோணமலையில் விநியோகம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
மக்கள் மரணப் பொறியில் எனும் வாசகம் அடங்கிய துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்ட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது

இன்று (15) காலை திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் முன்பாக தொழில் போராட்ட மத்திய நிலையத்தினரால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

திருகோணமலையில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தினை இந்தியாவுக்கு முழுவதுமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதுடன் இலங்கைக்கு உருத்தான எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் முகமாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அவ் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பெரும்  தொற்றின்  மூன்றாவது அலை ஓய்ந்து வருகிறது. இது பெரும்தொற்றினை  கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்தில்,சரியான முடிவு எடுக்காமல் பெருமளவு உயிர்களை கொண்று  இழப்பீடு செலுத்த நேரிட்டது அது மாத்திரமல்லாது பெரும்பாலானோரின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து திருடர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியது

நாட்டில் சம்பாதித்த பணத்தை கருப்பு பணமாக வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்ற உறவுகளை பற்றி பண்டோரா பேப்பர்ஸும்,பனாமா பேப்பர்ஸும்  அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளன. இவை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பதை உறுதியாக கூற முடியும் இதற்கு மத்தியில் இந்நாடு தற்போது மிகவும் தீர்க்கமான இடத்திற்கு வந்துள்ளது.

கேரவலபிட்டிய மின் நிலையத்தை எல்.என்.ஜி (இயற்கை திரவ எரிபொருள்) ஆக்கும்  போர்வையில் அதன் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மின்வலு நிலையங்களுக்கு LNG  வழங்கப்படுவதற்கான ஏகபோகம் வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் நாடு என்ற வகையில் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

விசேடமாக மின்சக்தியின் உரிமை அந்நாட்டு அரசிடம் இருக்க வேண்டும் அது வேறொரு நாட்டின் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றால் அரிசி  மாபியாக்கள்  அரசாங்கத்தை நிர்வகிப்பது  போன்று நாளை மின்சக்தி ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு அரசியலுக்கு வற்புறுத்தல் செய்யும் ஆற்றல் அந்த நிறுவனங்களுக்கும் அந்த நிறுவனங்களுக்கு உரிய நாடுகளுக்கும் கிடைக்கும்.

அது மாத்திரமல்லாது இப்போது திருகோணமலை எண்ணெய் குதங்களை  பெரும்பாலானவை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனை 51வீத பங்குகள் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டுள்ளன கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த 8 ஏக்கர் நிலம் சீனாவிற்கு விற்கப்படுகிறது இதனால் தற்போது கப்பல்களுக்கு வசதிகளை வழங்குவதால் துறைமுக அதிகாரசபை கிடைக்கும் முழு வருமானமும் பறிபோகும் இதேபோன்று மசகு எண்ணெய் சட்டத்தை திருத்தி இலங்கைக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் விநியோகிக்கும்,சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் உரிமையை மேற்படி நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராகிறது இதற்கான சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாது பலாலி விமான நிலையத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன மத்தள விமான நிலையமும் அந்தப் பட்டியலில் இருக்கின்றது தேசாபிமான முகமூடியை போட்டுக்கொண்டே இவ்வளவையும் செய்கிறார்கள் இவை அனைத்தும் ஒருபுறம் நடக்கும்போது மறுபுறம் உரம் இல்லாமல் அடுத்த போகத்தில் பயிர் செய்வது எப்படி என்ற பிரச்சினைக்கு விவசாயிகள் முகம் கொடுத்துள்ளார்கள்.

இது மாத்திரமன்றி எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டுக்கு  முகம்கொடுக்க நேரிடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது நாடு பூராவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சரியாக தடுப்பூசி வழங்காமல் பல்கலைக்கழகங்களை மூடி உள்ளார்கள் பல்கலைக்கழகங்களை திறந்தால் கல்வியை விலைபேசும் சட்டமூலத்தை கொண்டுவர முடியாது என்பதால் கூடுமானவரை பல்கலைக்கழகங்களை மூடி வைப்பது அரசாங்கம் திட்டமிடுகிறது

இவற்றை பார்க்கும் போது அமெரிக்க,சீன இந்திய அதிகார போட்டியில் நாங்கள் சிக்கியுள்ளது தெரிகிறது இந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பிற்கான இந்நாட்டு காணிகளில் மக்கள் சொத்துக்களை உலக பலவான்களுக்குக்கு  விற்கின்றார்கள். சரியாக காணிகளை வீடுகளை விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அடுத்த வருடத்தில் சமாளிப்பதே தவிர மேலும் 10 வருடங்களில் 30 வருடங்களில் 50 வருடங்களில் இந் நாட்டின் அடுத்த தலைமுறை செலுத்த வேண்டிய இழப்பீடு குறித்து எந்த பொறுப்புணர்வும் கிடையாது

இந்த பொறியில் சிக்க வைப்பது நாட்டு மக்களால் இழப்பீடு வழங்க நேரிடும் உலக வளங்களின் இந்தப் போட்டிக்கு முன்பாக எதிர்காலத்தில் நாம் அனைவரும் உலக யுத்தம் ஒன்று தள்ளப்படலாம் அப்படி நடந்தால் இந்நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் ஒவ்வொரு உயிரும் அந்த யுத்தத்தில் சிக்குவது தவிர்க்கவியலாது

இந்த சூதாட்ட சூதாட்டத்திற்கு பலியாவது நாமும் எமது பிள்ளைகளும் தான் எனவே இப்போது கண்களை திறந்து பாருங்கள் என்று எமது நாட்டு மக்களிடம் கேட்கிறோம் இந்த அழிவு  என்பது ஒரு கட்சியை அல்லது இரண்டை பாதிக்கக் கூடியது அல்ல முழு நாட்டையுமமே  பாதிக்கும் ஆகவே இவற்றிற்கு எதிராக நீங்கள் முன்வர வேண்டும் உங்களது திட்டமிட்ட அதிகாரமின்றி இந்த அழிவை தடுக்க முடியாது

சிலர் இந்த அழிவை விரும்பலாம் அடுத்த தேர்தலில் வெற்றிபெற மனிதர்களின் தலைகளை கழுவுவதற்காக அவர்கள் இந்த அழிவினை  பயன்படுத்தலாம் ஆனால் தேர்தல் ஒன்றின் மூலம் எவரையாவது நிறுத்தினால்  இந்த அழிவு  மாறாது அதற்கு மக்கள் ஒருங்கிணைய வேண்டும் எனவே ஒருங்கிணைய முன்வாருங்கள் என்று தொழிலாளர்களை,ஊழியர்களை,விவசாயிகளை,மீனவர்களை, இளைஞர்களை,மாணவர்களை,பெண்களை,ஒடுக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை நாம் வேண்டிக்கொள்கிறோம்

பிரச்சினைகளோடு நாளாந்தம் போராடும் உங்களுக்கு இந்தக் குரல் கொஞ்சம் தூரமாக தெரியக்கூடும் ஆனால் நாளை இந்தப் பாதையை தவிர வேறு பாதை உங்களுக்கு இல்லை ஆகவே உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்ப மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப எங்களோடு ஒருங்கிணையுமாறு உங்களிடம் வேண்டிக் கொள்கின்றோம் என இன்று திருகோணமலையில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது