கல்குடாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கல்  நிகழ்வு

க.ருத்திரன்.
பயங்கரவாத வன் செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கல்  நிகழ்வு மற்றும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்திற்கான முதலாம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு என இரண்டு வெவ்வேறுவேறுபட்ட நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (15) கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலமையில் நடைபெற்றது.
இதன்படி கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 51 பயனாளிகளுக்கும் மற்றும் அண்மைய பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள 22 பயனாளிகள் பயங்கரவாத வன்செயல்களில் பாதிக்கபட்டோர் என 73 பேருக்கு காசோலைகள் வழங்கி வைக்கபட்டன.

 இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மானிக்கப்படவுள்ள 9 வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
 இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஹாபீஸ் நசிர் அகமட்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முசாமில்,கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர்.திருமதி சோபா ஜெயரஞ்சித்,தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் ஜெகநாதன் மாவட்ட செயலக உதவி திட்டப்பணிப்பாளர் நவனிதன் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து காசோலைகளை வழங்கி வைத்தனர்.