எனது விருப்பத்துக்குரிய ஆசிரியர் ” போட்டியில் திருமதி பார்வதி மாசிலாமணி வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச ஆசிரியர்கள் தினத்தினை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் நடாத்திய “எனது விருப்பத்துக்குரிய ஆசிரியர் ” போட்டி.

( நூருல் ஹுதா உமர் )

சர்வதேச ஆசிரியர்கள் தினத்தினை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் நடாத்திய “எனது விருப்பத்துக்குரிய ஆசிரியர்” (My Favourite Teacher) எனும் போட்டியில் பெரும்பான்மை மாணவர்களின் ஏகோபித்த தெரிவாக. திருமதி பார்வதி மாசிலாமணி வெற்றி பெற்றுள்ளார். ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான  மர்ஹும் ஏ.ஆர் . மன்சூர் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு கல்முனையிலுள்ள அதன் அலுவலகத்தில்  நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் கலந்து கொண்டு  திருமதி பார்வதிமாசிலாமணிக்கு சிறந்த ஆசிரியருக்கான மர்ஹும் ஏ ஆர். மன்சூர் ஞாபகார்த்த விருதை வழங்கி வைத்தார்.அத்துடன் பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. இதில் மர்ஹும் ஏ.ஆர் . மன்சூர் பெளண்டேசன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.