எப்.முபாரக்
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை கூரான கத்தியால் வெட்டி காயப்படுத்திய மூன்று சந்தேக நபர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரசாக் முகம்மட் பயாஸ் இன்று(14) உத்தரவிட்டார்.
நொச்சிக்குளம்,மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 26,28,மற்றும் 30 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் இணைந்து குடும்ப பகைமை காரணமாக மற்றொரு நபரை மறைந்திருந்து கூர்மையான கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.