கந்தளாயில் விபத்து சப் இன்ஸ் பெக்டர் பலி.

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்  புகையிரத கடவையில் மோதியதில் காரில் பயணித்த பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பொலிஸ் ஆய்வாளர் படுகாயமடைந்த நிலையில்  கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (11) 10.30 இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நெலுவ – எல்லகாவ வந்த பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எல்.சிறிசேன (58வயது) எனவும் படுகாயமடைந்தவர் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தளை-மஹாவெல பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எம்.டி.பீ. திசாநாயக்க (55 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பொலிஸ் ஆய்வாளரின்  சடலம் தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.