ஏறாவூர்ப்பிரதேசத்தில் மாணவர்கள் கௌரவிப்பு.

(ஏறாவூர் நிருபர் – நாஸர்)
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர        சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர்ப்பிரதேசத்தில் ஒன்பது பாடங்களிலும்                   ஏ சித்திகளைப்பெற்றுக்கொண்ட மாணவர்களைப்பாராட்டி   கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் அல் – முனீறா பாலிகா           மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பிரதேசத்தைச்சேர்ந்த இருபது மாணவர்கள் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி ளெரவிக்கப்பட்டனர்.
சுகாதார விதிமுறைக்களுக்கமைவாக இந்நிகழ்வு நடைபெற்றது.
விஷன் தமிழ் நிறுனத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. பிரவுஸ் அவர்களது வழிகாட்டலில் நிறவனத்தின் செயலாளர்    எஸ்எல்ஏ. ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்               பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத்                   பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்;.
பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம்,                பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த,               நகர சபையின் செயலாளர் சியாஉல் ஹக்,                   மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிமனையின்                   கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் மற்றும் கல்வி வலயத்தின் சமாதானக்கல்வி இணைப்பாளரும்  சிரேஷ்ட ஊடகவியளாருமான எம்ஜிஏ நாஸர் ஆகியோர்                ஏனைய அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அலிகார் மற்றும்  மாக்கான் மாக்கார் ஆகிய  தேசிய பாடசாலைகள், அல்- முனீறா பாலிகா மற்றும் றகுமானியா மகா வித்தியாலம்,           அல் – அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும்        அறபா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த             இருபது மாணவர்கள் இம்முறை ஒன்பது பாடங்களிலும்                 ஏ  சித்திபெற்றிருந்தனர்.
 இம்மாணவர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கான முதலாவது பாராட்டு வைபவம் இதுவாகும்.