வவுணதீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

கமல்

அதி கஷ்ர பிரதேசமான  மட்டக்களப்பு வவுணதீவில் க.பொ.த(சா/த)சித்தியடைந்து உயர்தரத்துக்கு தெரிவாயுள்ள வறுமைக் கோட்டில் வாழ்ந்துவரும்   மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அயர்லாந்திலுள்ள ROYAL RETURNS COMPANY நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இக் கற்றல் உகரணங்கள் மேற்படி நிறுவனத்தின் இலங்கைக்கான  சமூக சேவைகளுக்கு பொறுப்பான   வின்சன்ட் மகளிர் பாடசாலையின் ஆசிரியர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறான ஏழை மாணவர்களுக்கு பொருட்களை வழங்குவதற்கு ROYAL RETURNS COMPANY இன் தலைமைக் கண்காணிப்பாளராக அயர்லாந்தில் பணிபுரியும் எம்மட்டு மண்ணின் சேர்ந்த அருள்குமரன் மகேந்திரராஜா அவர்களே தனது நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைய குறித்த உதவி வழங்கிவைக்கப்பட்டது.
 குறித்த உதவித்திட்டத்தின் ஊடாக இம்முறை சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகிய பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பலருக்கு வழங்கி வைக்கப்பட்டது. தற்போதைய கொவிட் சூழ் நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில் தங்களது பிள்ளைகளுக்கு இவ்வாறான உதவி மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் இதனை மேற்கொண்ட நிறுவனத்திற்கும் ஒழுங்கு படுத்தி தந்த மட்டக்களப்பு சமூக பற்றாளன் அருள்குமரன் அவர்களுக்கும்
இதன் போது பெற்றோர்கள் நன்றியைத் தெரிவித்தனர்