திருமலையில் மதுவுடன் சேர்த்து நஞ்சருந்திய மட்டு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி.

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம்வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட சிறுவர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஒன்று முப்பது மணி அளவில் மது போதையுடன் நஞ்சருந்திய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது  ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலிருந்து 29, மற்றும்
 19 வயது மற்றும் இரண்டரை வயதுடைய மூவரும் திருகோணமலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று தங்கி இருந்ததாகவும்  இருவரும் இன்று (10) காலை 11 மணி வரை கதவை திறக்கா மையினால் இரண்டரை வயது சிறுமி அழுததையடுத்து ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கியதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேருமீ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனாலும் இவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.