உலக தபால் தினம்

கதிரவன் எஸ்எஸ்.குமார்
திருகோணமலை
உலக தபால் தினம்  சனிக்கிழமை 2021.10.09 அனுஸ்டிக்கப்பட்டது.
திருகோணமலை சீனக்குடா தபால் நிலையத்தில் தபால் அதிபர் த.சிவானந்தராஜா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 30 குடுப்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
147வது தபால் தின விழிப்பணர்வும் கொவிற் தடுப்பு செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது.
வீதியால் பயணம் செய்த 300 பேருக்கு முக கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட தபால் அத்தியட்சகர் சி.அருட்செல்வம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்