வடமாகாண புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னாருக்கு விஜயம். அரச அதிபருடன் சந்திப்பு

( வாஸ் கூஞ்ஞ)

வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ அவர்கள் வெள்ளிக் கிழமை (08.10.2021) மன்னார் மாவட்டத்துக்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தார்.

அன்றைய தினம் (08.10.2021) மன்னார் மாவட்ட செயலகத்துக்கும் மாலை நான்கு மணியளவில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்லுள்ள வீரசிங்க அவர்கள் சகிதம் வருகை தந்திருந்தார்.

அங்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து உரையாடியாடினார்.

குறித்த இவ் இருவரினதும் சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.