தேசியக் கட்சி என்று சொல்லும் யாருக்கும் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை கிடையாது

வீ.ஆனந்தசங்கரி

யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை ஆனால், தர்மலிங்கத்தைச் சுட்ட கட்சி இன்று தேசியக் கட்சி என்று சொல்கிறது. இப்போது தேசியக் கட்சி என்று சொல்லும் யாருக்கும் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை கிடையாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்த செயற்பாட்டுக்காக வருகை தந்திருந்த வி.ஆனந்தசங்கரி ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போது தேசியக் கட்சி என்று சொல்லும் யாருக்கும் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை கிடையாது எங்களைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் தந்தை செல்வாவினுடைய தமிழரசுக்கட்சிக்கு மாத்திரம்தான் உண்டு. தந்தை செல்வா ஒரு போதும் இம்சையைப் பற்றிப் பேசவில்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒருபோதும் இம்சையைச் சொல்லவில்லை.

பாராளுமன்றம் ஏறத் தகுதியில்லாதவர்கள் 20 வருடங்களாகப் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.  பிச்சை எடுக்கிற ஒருத்தன் கூட பாராளுமன்றத்தில் இருக்கலாம். ஆனால், கை சுத்தமில்லாத, இதயம் சுத்தமில்லாதவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள். இவர்கள் எதைக்கேட்கிறார்களோ அதற்கு அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். என்னைக் கொலை செய்ய வந்ததற்கான ஆதாரம் என்னிடமிருக்கிறது.

தங்கத்துரை திட்டமிட்டுக் கொல்லப்பட்டார். ஆதனை யாராவது கேட்டார்களா. கிள்ஸ்லி ராஜநாயகததினுடைய இடத்தைப் பிடித்தவர் கேட்டாரா. இவர்கள்தான் தலைவர்கள். மக்கள் பாவம். புதிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு நல்லதொரு அறிவாளி விசயம் தெரிந்தவர். ஆனால் வரலாறு தெரியாதவர். வரலாறு தெரிந்த ஒருவர் சம்பந்தருடன் சேர்வாரா. சும்பந்தருடைய குற்றங்களைப் பட்டியல் போட்டுக் காட்ட முடியும்.

சம்பந்தர் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று விட்டு விடுவோம். இப்போது யார் கையொப்பம் இடுவது. நான் கடிதம் கொடுப்பதா நீ கடிதம் கொடுப்பதா என்று அடிபடுகிறீர்கள். ஆனால் 22 பேருடன் பாராளுமன்றம் போனீர்கள். ஆறு வருடம் இருந்து எல்லா வசதிகளையும் அனுபவித்தவர்கள். பின் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்தவர்கள் அரசாங்கத்திடம் கேட்டீர்களா. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி கேட்டீர்களா. இப்போது என்ன பெரிதாக நாடகம் ஆடுகிறீர்கள். நாங்கள் ஒருவரிடமும் கேட்கவில்லை ஏன் மக்கள் எங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான கட்சிகள் கறைபடிந்தவைகளே, குழறுபடிகள், குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஒரு குற்றமும் செய்யாத கட்சி என்றால் தொண்டமானுடன் சேர்த்து உருவாக்கப்பட்ட அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நிதானமாகச் செயற்படும் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றுதான்.

தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் இனி நாங்கள் பிரியக் கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட கட்சி இன்றும் உயிரோடு இருக்கிறது. மக்களது பிரச்சினையைத் துpர்ப்பதற்குமு; தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கும் அந்தக் கட்சிக்குத்தான் உரிமையும் இருக்கிறது.

உயரத்திலிருந்து இறங்கி இறங்கி பாதாளத்துக்கு வந்துவிட்டோம். இனியேனும் காப்பாற்றுவதென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றால்தான் முடியும் என்றார்.

அவரின்  உரை முழுமையான வீடியோவில்

HomePage