வவுனியாவில் பகல் கொள்ளையர்கள் கைவரிசை : பெருமளவு பணம் மற்றும் நகை திருட்டு

வவுனியாவில் பகல் கொள்ளையர்களின் கைவரிசையால் பெருமளவு பணம் மற்றும் நகை திருடப்பட்டள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் வவுனியா, குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்றுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் வசித்த குடும்பத்தில் நேற்று காலை வெளியில் சென்றிருந்த நிலையில், மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பிரதான கதவும் அலுமாரிகளும் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருந்தன.

இதன்போது, 4 பவுண் நகையும்  3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணமும் களவுபோயுள்ளதாக  வீட்டு உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளை ஆராய்ந்ததோடு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.