குளவி கொட்டுக்கு இலக்காகி 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி

தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றின் கூட்டிலிருந்து கலைந்து வந்த குளவிகள் தொழிலாளர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.