ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால் கொரோனா தடுப்பு வேலைதிட்டம் முன்னெடுப்பு

நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆயுர்வேத பாணப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

குறித்த வேலைத்திட்டமானது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில்  அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக அம்பாறை, தீகவாவி, போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸார், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்குமாக இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் “சுவதாரணி” ஆயுர்வேத பான பொதிகள் வழங்கிப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இது மாத்திரமின்றி கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.