வாழைச்சேனை – வெள்ளாமைச்சேனை வயல் பகுதியில் சடலம் மீட்பு; யானை தாக்கி மரணமடைந்திருக்கலாம் என்று சந்தேகம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாமைச்சேனை வயல் பகுதியில் விவசாயி ஒருவரின் சடலம் இன்று (29) புதன்கிழமை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஓட்டமாவடி – மீராவோடையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய அலியார் முகம்மட் காஸிம் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது இல்லத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் வெள்ளாமைச்சேனையிலுள்ள அவரது வயலுக்கு சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது வயல் பகுதியில் தனினையில் இருந்த நிலையிலே இவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமா மீட்கப்பட்டுள்ள நபர் யானை தாக்கி மரணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணமடைந்த நபரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.