வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய சுகாதார நடைமுறை

இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக் ஒன்றினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பயணி ஒருவர் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி, இரண்டு வாரங்கள் கடந்த பிறகு நாட்டுக்கு வருவாராயின், நாட்டிற்கு வருவதற்கு 72 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதணையில் பயணிக்கு தொற்று இல்லையெனில், இலங்கை வைத்து அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  நடைமுறையானது கட்டுநாயக்க மற்றும் மத்தள ஆகிய இரு விமான நிலையங்களிலும் எதிர்வரும் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.