அதியாவசிய பொருட்களை விடுவிக்க மேலதிக பணம் தேவைப்பட்டால் வழங்க தயார் : கப்ரால்

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை மீட்பதற்காக மேலதிக பணம் தேவைப்படுமானால் அதனை வழங்க தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

குறித்த பொருட்களை விடுவிப்பதற்காக  இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு வழங்கப்பட்ட பணம்  இரண்டு அரச வங்கிகள் மூலமாக  இறக்குமதியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பில் மேலதிக பணம் தேவைப்பட்டால் அதனையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.