அரிசிக்கான புதிய விலைகள் அறிவிப்பு

அரிசிக்கான புதிய விலைகளை பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானத்தின்படி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்களால் அரிசிக்கான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவுக்கும், கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 165 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.