நாட்டை திறப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் : இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டை திறப்பது பற்றிய இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில்  நாட்டை திறப்பது பற்றிய இறுதித் தீர்மானம் அறிவிக்கபடும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிபிட்டார்.

தொடர்ந்தும் இதுபற்றி கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டவுடன் அர நிறுவனங்களை இயக்கும் முறை மற்றும் போக்குவரத்து சேவையை நடாத்தும் முறை  போன்றவற்றை தயாரிப்பதற்கு கோவிட் செயலணியினால் உரிய தரப்பினருக்கு ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.