அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை முடிவு

அரிசிக்கான உயர்ந்தபட்ச மொத்தவிலை மற்றும் உயர்ந்தபட்ச சில்லறைவிலை என்பன நீக்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரிசிக்கான உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலைகளை உள்ளடக்கி முன்னர் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரிசிக்கான விலையை அதிகரிக்காதுவிடில் உற்பத்தி நடவடிக்கையிலிருந்து விலக நேரிடுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.