தேர்தல்களை நடத்திக்காட்டுமாறு சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு சவால்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்திக்காட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

அம்பாறையில்  ஊடகவியளாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த சவாலை விடுத்துள்ளார்.

உரிய நேரத்தில்  தேர்தல்களை நடத்தினால்தான் மக்கள் அரசாங்கத்தின்மீது வைத்துள்ள அபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள  முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.