திருகோணமலையில் குட்டிப்புலி கூட்டத்தின் தலைவர் கைக்குண்டுடன் கைது

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்

திருகோணமலை உப்புவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநகர் நகர் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதக உப்புவேலி பொலிசார் தெரிவித்தனர்

சம்பவ தினமான நேற்று (26) உப்புவேலி இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகல்களுக்கமைய சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேவநகர் பிரதேசத்தை சேர்ந்த பாபு (குமார் அந்தோணி பிரான்சிஸ்) எனவும் தெரியவந்துள்ளது

இவர் வடக்கில் ஆவா கும்பலை போன்ற குட்டிப்புலி எனும்  ஒரு கும்பலை உருவாக்கி உள்ளூர் மக்களை மிரட்டிய பல்வேறு குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் ஆரம்பகட்ட விசாரைணைகளில் தெரியவந்துள்ளதாக உப்புவளி பொலிசார் தெரிவித்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்றக்கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவேலி பொலிசார் மேற்றக்கொண்டு வருவதக்கவும் பொலிசார் தெரிவித்தனர்