தனது நாக்கை இரண்டாக பிளந்த யாழ் இளைஞன் : பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கை  சத்திர சிகிச்சை மூலமாக  இரண்டாக பிளந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக வெட்டிக்கொண்டு அதன் புகைப்படமொன்றையும்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த இளைஞன் பச்சை குத்துவதில் பிரபலமான நபர் என்றும் அவர் காலிக்கு சென்று தனது நாக்கை இரண்டாக பிளந்துகொள்ளும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இளைஞனின் இச்செயற்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.