ஆண்கள் முகச்சவரம் செய்தால் கடுமையான தண்டனை : தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்யும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழஙகப்படுமென தலிபான்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் பகுதியில் இந்த அறிவித்தல்  விடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஆண்கள் எவருக்கும் முகச்சவரம்  செய்யக் கூடாது என்று முடி திருத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய சட்டத்திற்கு முரணாக முகச்சவரம் செய்யவேண்டாம் என்றும், குறித்த உத்தரவை மீறினால் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆண்கள் முகச்சரவம் செய்வதற்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.