விலை அதிகரிக்கப்படாவிடில் உற்பத்தியிலிருந்து விலக நேரிடும் : அரிசி உற்பத்தியாளர் சங்கம்

விலையை அதிகரிக்காதுவிடின் உற்பத்தி செயற்பாடுகளிலிருந்து விலக நேரிடும் என்று இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் தற்போது அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். எனவே,  கீரி சம்பா அரிசிக்கு 160 ரூபா சில்லறை விலை பெற்றுத் தரப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இது குறித்து அச் சங்கத்தின் செயலாளர் முதித் பெரேரா கருத்து தெரிவித்தபோது,

அரிசி உற்பத்தியாளர்களின் அடிமட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன், அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் அரிசியை மாத்திரம் விலை குறைத்து வழங்குவது பொருத்தமற்றது என்றும் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.