காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு சம்மாந்துறை நீதிமன்றம் தடைஉத்தரவு!

(காரைதீவு சகா)

சம்மாந்துறைபிரதேச நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்  தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினநிகழ்வுகளை  தடைசெய்யும் விதமாக, சம்மாந்துறை  நீதவான் நீதிமன்றம் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு   தடை உத்தரவு கடிதத்தை வழங்கியுள்ளது.


நேற்று(26) அவரின் இல்லத்திற்கு சென்று சம்மாந்துறைப்பொலிசார் 
தடை உத்தரவு கடிதத்தை கையளித்தனர்.

சம்மாந்துறைபொலிஸ் நிலையத்தின்  பிரதானபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத் தாக்கல்செய்த அறிக்கையினடிப்படையில், இந்த நீதவான் நீதிமன்ற கட்டளை பிறப்பித்துள்ளது.


அதன்படி ,சம்மாந்துறைப்பிரதேச நியாயாதிக்க எல்லைக்குள் யுத்தத்தினால் இறந்தவர்களின் நினைவேந்தலையோ ,ஊர்வலங்களையோ, விளக்கேற்றலையோ நடாத்தமுடியாது.