தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: எம்.ஏ சுமந்திரன்

தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து  தெரிவிக்கும்போதே அவர் அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும். பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தலும் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.