முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை அறிவிப்பு

புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் இன்று மின்தடைப்படும்  என்று  இலங்கை மின்சார சபையின் முல்லைத்தீவு அலுவலகம் அறிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் தொடக்கம் வட்டுவாகல் பாலம் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த மின்தடை ஏற்படுமென மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

இதன்படி, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு நகர்,  மந்துவில், ஆனந்தரபும், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் போன்ற இடங்களில் குறித்த மின்தடை ஏற்படுமென மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.