முச்சக்கரவண்டி திடீரென பற்றி எரிந்ததில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.