வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கொரோனா பிரிவுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு சுமார் 215,000 ரூபாய் பெறுமதியான ஒட்சிசன் இயந்திரம், முகக் கவசம் போன்ற வைத்திய உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (24) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 2001 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண வகுப்பு பழைய மாணவர் சங்கத்தினர் இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

குறித்த உபகரணங்களை பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். தாஹிருடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தினர்  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என். மயூரன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பீ.சதீஷ்குமார் ஆகியோர்களிடம் வழங்கி வைத்தனர்.

இவ் உபகரணங்களை வழங்கி வைத்த பழைய மாணவர் சங்கத்தினருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.