இ.கி.மிசன் இல்ல மாணவர்கள் 16பேரில் 14பேர் உயர்தரம்கற்க தகுதி!

மட்டு.இ.கி.மிசன் உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ கூறுகிறார்.
( வி.ரி.சகாதேவராஜா)

நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி மட்டக்களப்ப கல்லடி இ.கி.மிசன் இல்ல மாணவர்கள் 16பேரில் 14பேர் உயர்தரம்கற்க தகுதி பெற்றுள்ளரென மட்டு.இ.கி.மிசன் உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ கூறினார்.

அங்கு இம்முறை 16மாணவர்கள் கொவிட்டுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களில் ஒருவர் 3ஏ3பி3சி பெறுபேறு கிடைத்துள்ளது. மொத்தமாக 14பேர் உயர்தரம் கற்கத்தகுதிபெற்றுள்ளனர்.அனைவரையும் வாழ்த்துவதாக அவர் மேலும் கூறினார்.