மூதூர் தள வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

இஃஜாஸ் ஏ பரீட்,
மூதூர் தள வைத்தியசாலையின் ஊழியர்கள், இன்று (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தாதியர்கள், மற்றும் சிற்றூழியர்கள், சாரதிகள்,  பராமரிப்பாளர்கள், மருத்துவ குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண  அரச தாதி உத்தியோகத்தர் சங்க தலைவர் எம். எம். பைஸாத் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மூதூர் தள  வைத்தியசாலைக்கு முன்பாக மதியம் ஒன்று கூடிய இவர்கள், பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தமது கோரிக்கை சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை சிற்றூழியர்கள் தாங்கியிருந்தனர்.
இதன்போது கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும்
கொவிட் -19 நிலையங்களில் கடமை புரியும் ஊழியர்களின் அடிப்படை தேவைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடு.
கொவிட் -19 தொற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை வழங்கு.
சுகாதார அமைச்சே கொவிட் -19 தடுப்புச் செயற்திட்டத்திற்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்வாங்கு.
சுகாதார ஊழியர்களுக்கான 7500 ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்கு.
கொவிட் -19 நிலையங்களில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்கு.
சுகாதார ஊழியர்களுக்கு N-95 Mask பெற்றுத்தா.
N-95 முகக்கவசம் பாதுகாப்பான உடை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கு.
சுகாதார சேவையை மூடிய சேவையாக மாற்று.
போன்ற சுலோகங்களும் காணப்பட்டது.