மட்டகளப்பு பொலிஸ் பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் அலியாருக்கு பதவிஉயர்வு.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
மட்டகளப்பு பொலிஸ் பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிவரும்
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அலியார் அப்துல் வாஹித் உதவி் பொலிஸ் அத்தியட்சகராகபதவி உயர்வு பெற்றுள்ளார்.
பொத்துவில் சவளக்கடை,, மூதூர், உடதும்புற, ஹட்டன், திருகோணமலை, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், கறடியனாறு போன்ற இடங்களில் நிலையப்பொறுப்பதிகாரியாக கடமையாற்றியதுடன் தற்போது மட்டகளப்பு பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடைமையாற்றுகின்றார்
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர் அட்டாளைச்சேனையின் வரலாற்றில் முதலாவது உதவி பொலிஸ் அத்தியட்சகராவும் பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
 இவர் மர்ஹூம்களான ஏ.அலியார் மற்றும் எம்எல். கதீசா உம்மா ஆகியோரின் முலாவது புதல்வராவார்.