கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்வெளி  பகுதியில் டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (21) 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாட்டு பட்டியலிலிருந்து கிண்ணியாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் கிண்ணியாவில் இருந்து தம்பலகாமம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதினாலேயே இவ் விபத்து இடம் பெற்றதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த அலிமுஹான் அன்வர் (44வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை யடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சாரதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.