ஐக்கிய நாடுகள் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது.

கொவிட்19 தொற்றுநோயிலிருந்து  நம்பிக்கையான மீட்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், நிலைத்தன்மையை உருவாக்குதல்  போன்ற விடயங்களை மையமாக கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் குறித்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, உணவுக்கட்டமைப்பு கூட்டத்தொடரிலும், எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.