மன்னார் மாவட்டத்தில் 18 ந் திகதி வரை கொரோனா தொற்றாளர்கள் 2028 ஆக உயர்வு.

(வாஸ் கூஞ்ஞ) 19.09.2021

மன்னார் மாவட்டத்தில் 18.09.2021 அன்று எட்டு கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் தொகை மொத்தமாக 2028 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக நாளாந்தம் வெளியிடும் தகவலில்

18.09.2021 அன்று மன்னார் பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 2 கொரோனா தொற்றாளர்களும் அன்ரிஜென் பரிசோதனையில் மன்னார் பொது வைத்திசாலையில் 5 நபர்களும், எருக்கலம்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருமாக மொத்தம் எட்டுபேரே இவ் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை (18.09.2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 2028 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடம் 2021 இல் 2011 ஆகவும் இந்த மாதம் (செப்ரம்பர்) 344 ஆகவும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் இதுவரை 28784 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் இந்த மாதம் (செப்ரம்பர்) 1024 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி 72165 பேருக்கும்,  இரண்டாவது தடுப்பூசி 58544 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

மன்னாரில் கொரோனாவினால் இறந்தவர்களின் தொகை 23 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.