பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வு.

( ஐ.ஏ.ஸிறாஜ் )

பாலமுனை ஹெல்த் போரம் மற்றும் பாலமுனை ஜெம்மியத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில்.  றம்ய லங்கா மற்றும்  மேமன் எய்ட்  அமைப்புக்களின் அனுசரணையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில்  இரத்ததான நிகழ்வு  நேற்று (19) பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லுரியில் இடம்பெற்றது.
பாலமுனை ஹெல்த் போரத்தின் தலைவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியுமான எஸ்.எம்.றிபாஸ்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் பிரதி தலைவரும் பாலமுனை ஜெம்மியத்துல் உலமா சபையின் ஆலேசகருமான  அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாசிம் (மதனி) உட்பட ஹெல்த் போரத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாலமுனை ஹெல்த் போரத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இரத்ததானம் வழங்கும் உயரிய பணியில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளையும்  கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர். இதற்கமைவாக நுாற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.  இதன் போது இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு உதிரம் வழங்கிய அனைவருக்கும்   மேமன் எய்ட் (Memon Aid) அமைப்பினால் வழங்கப்பட்ட போசனை உணவுகள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.