தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கவேண்டாம் என அரியநேத்திரனுக்கும் தடை உத்தரவு:

தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு இம்மாதம் செப்டம்பர் 26இல் இடம்பெறவுள்ளமையால் அதனை தடைசெய்யும் விதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற தடை உத்தரவு கடிதம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு இன்று (18.09.2021) அவரின் இல்லத்திற்கு சென்று கொக்கட்டிச்சோலை பொலிசார் கையளித்தனர்.

இந்த நீதவான் நீதிமன்ற கட்டளையில் பா.அரியநேத்திரனுடன் மேலும் எட்டுப்பெயருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.சுரேஷ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்மற்றும் ச.சிவலோகநாதன்,கு.குணசேகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.ஶ்ரீநேசன்,பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் இ.நித்தியானந்தன்,வாலிபர் முன்னணி தலைவர் கி சேயோன் ஆகிய பத்து பேரின் பெயர் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.