திருகோணமலையில் 20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தில் நாளை (19) முதல் 20 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கான முதலாம்கட்ட கோவிட் -19 கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது

அதனடிப்படையில் நாளை ஐந்து தடுப்பூசி வழங்கும் நிலையங்களினுடாக  20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற உள்ளது

இதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,விபுலானந்தாக் கல்லூரி(உவர்மலை),அன்புவழிபுரம் கலைமகள் கல்லூரி,                                       திருக்கடலூர் கிளினிக் நிலையம் மற்றும் அபயபுரம் கிளினிக் நிலையங்களில் காலை 9மணி முதல் 3மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தியுள்ளது

மேலும்  20-29 வயதிற்கு உட்பட்டவர்கள் உங்களது தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளித்து தவறாது தடுப்பூசியினை பெற்று கொவிட் – 19 கொரோனா தொற்றிலிருந்து  பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.