யாழ். கொக்குவில் பகுதியில் வியாபாரிகள் மீது அண்டிஜென் பரிசோதனை!

யாழ். கொக்குவில் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தபோது குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அழுலிலுள்ள நிலையில் யாழ்.பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக இடைவெளியை மீறி மதுபானங்களை கொள்வனவு செய்வோரை விடுத்து சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அங்கு நின்ற பலரும் விசனம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.