ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி  நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காகவே ஜனாதிபதி அமெரிக்காவிற்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணரால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ஃபேபியன் சால்வியோலியினால் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை ஊக்குவிப்பது  குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற 18 மாத ககாலத்தில், மனித உரிமைகள் சூழ்நிலையில் இலங்கை பெரும் சரிவைக் கண்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.