போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும் : விவசாய அமைச்சர்

விவசாயிகள் நெல்லை விற்காது போராட்டம் நடாத்தினால் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரண்டு ஆண்டுகளுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை ரூபா 25 இனால் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், விவசாயிகள் போராட்டம் நடத்த எண்ணினால் வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய அமைச்சர் என்ற வகையில்,  அரிசி இறக்குமதியை நானே நிறுத்திவைத்துள்ளேன். விவசாயிகள் நெல்லை விற்கவில்லையாயின் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.