கிழக்கு மாகாண ஆளுநரால் சுதேச மருத்துவ பணி குழு நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர்‌ அனுராதா யஹம்பத்‌ அவர்களினால் கிழக்கு மாகாணத்தில்‌ ஆயுர்வேத மருத்துவ பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவும், உள்ளூர்‌ மருந்துகளை வழங்குவதற்கும்‌, நோயிலிருந்து விடுபட தேவையான மருந்துகளை ஊக்குவிப்பதற்கும்‌ இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை விரைவில்‌ வழங்குவதற்கான திட்டத்தை நிறைவேற்றும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இக்‌குழு செயற்படவுள்ளது.

இக்குழுவில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்‌ அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும்‌ 17 உறுப்பினர்கள் ஆளுநரால் தெரிவுசெய்து நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பணிக்குழுவில்‌ உள்ளடங்குவோர்‌ பின்வருமாறு,

1. வெங்கமுவே நாலக தேரோ (வனவாசல கோவில்‌, களனி)

2. துசித பி.வணிகசிங்க (பிரதம செயலாளர்‌, கிழக்கு மாகாணம்‌)

3. ஏ.வி.எம்‌ அன்சார்‌ (செயலாளர்‌, மாகாண சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாணம்‌)

4. வைத்தியர்‌ ஸ்ரீதர்‌ (மாகாண ஆணையாளர்‌, ஆயுர்வேத துறை, கிழக்கு மாகாணம்‌)

5. வைத்தியர் ‌ ஷியாமளா வர்ணகுலேந்திரன்‌ (கோனேஷபுரி ஆயுர்வேத மருத்துவமணை, திருகோணமலை)

6. வைத்தியர் மதிவம்‌ நிரஞ்சன்‌
(மருத்துவ கண்காணிப்பாளர்‌, ஆயுர்வேத மருத்தவமனை, திருகோணமலை)

7. வைத்தியர் ஜெ.பாஸ்கரன்‌ (மருத்துவ மேற்பார்வையாளர்‌,
சித்த ஆயுர்வேத மருத்துவமனை, மட்டக்களப்பு

8. வைத்தியர் ‌ எம்‌.அலியார்‌ நபீல்‌ (வைத்திய அத்தியட்சகர், மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை, நிந்தவூர்‌)

9. டி.எஸ்.எல். திஸாநாயக்க (கிராமிய ஆயுர்வேத மருத்துவமனை, வெரன்னகெடகொட)

10. திருமதி ஜே.எல்‌.என்‌.டி. குமாரிஹாமி (ஆயுர்வேத மருந்தகம்‌, படையாதலாவ)

11. வைத்தியர் எம்‌.வெர்மேத்திரன்‌

12. வைத்தியர்  டி எம்‌.ஏ.பிரியந்த வன்னியாராச்சி

13. வைத்தியர் டபிள்யு எம்.எஸ். சரத்‌ கோட்டயவத்த (ஆயுர்வேத மருத்துவர்‌)

14. சுலைமாலெப்பை முகம்மது நாசிறூன் (இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை)

15. வைத்தியர் தி.ஸ்ரீ சந்திரராஜா

16. வைத்தியர் ‌ டபிள்யூ.எம். நிலங்கா சுதர்சன (மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை, தெஹியத்தகண்டிய)

17. சிந்தக விஜேவர்தன (ஆளுநரின்‌ ஒருங்கிணைப்பு செயலாளர்‌ – கிழக்கு மாகாணம்‌)