சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் பின்நிற்காது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று  அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துவெளிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒழுக்க விழுமியங்களைப் பேணும் நாட்டொன்றை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசினதும் ஜனாதிபதியினதும் எதிர்பார்ப்பாகுமெனவும், எவ்வாறான சம்பவம் நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக  தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.