இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவோருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

இணையத்தில் நிகழ்நிலைவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எவரேனும்  அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்த்திடம் நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ்  தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் முறைமையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு யாராவது ஒருவர் ஏதேனும் வழிமுறையில் குறித்த கற்பித்தலை நிறுத்தும்படி அச்சுறுத்தல் விடுத்தால் அதுகுறித்து நேரடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு அவ்வறித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  அவசியமேற்படின் 119 காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு தொலைபேசி மூலமாகவும் அறிவிக்க முடியுமென அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தாமதிக்காமல்  கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.