அமைச்சர் வீட்டிலிருந்தே கைக்குண்டை கொண்டுவந்தேன் : சந்தேகநபர் வாக்குமூலம்

கொழும்பு, நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்தே கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை உப்புவெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் குருணாகல், மஹவ பகுதியில் வைத்து இன்னுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.