இலங்கை – சுவிட்சர்லாந்து இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும்  இடையில் மீண்டும் நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விமான சேவையை சுவிஸ் இண்டர் நேஷனல் விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர்  4 ஆம் திகதி தொடக்கம்  குறித்த விமான சேவை மீண்டும் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாராந்தம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.