பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டும்

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டியது அவசியமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக சர்வதேச ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி தலைமையிலான கோவிட் பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் பாசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் தொடர்பில் கல்வி அமைச்சு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் கபில பெரேரா மேலும்  தெரிவித்துள்ளார்.