அனுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரை சந்திக்க வேண்டும் என கைதிகள் அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு அமைவாக குறித்த சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தான் தனிபட்ட முறையில் முன்னெடுப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.