நாட்டை திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கொவிட்  கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் குறித்த  தீர்மானம் எடுக்கப்பவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடந்தும் நீடிக்குமாறு இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அத்தோடு, இலங்கை கொவிட்-19 அபாயமுள்ள  உள்ள சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயமாக மாற்றுவது எமது இலக்காக இருக்கவேண்டுஎனவும் விசேட வைத்தியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றையும் கவனத்திற்கொண்டே நாட்டை திறப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், பாடசாலைகளை மீளத் திறத்தல், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லை போன்றவை தொடர்பாகவும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.